மந்திரதீட்சைக்கும் உலகவாழ்க்கைக்கும் எவ்வித தொடர்புமில்லை! காரைதீவில் இ.கி.மிசன் சுவாமிகாரைதீவு நிருபர் சகா-

லகில் வாழும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமுள்ளது. மல்லிகைச்செடி
என்றால் அதன்நோக்கம் மல்லிகை மலரைத்தருவது.மாமரத்தின்நோக்கம்
என்னவென்றால் மாங்கனியைத்தருதலாகும்.அதுபோல் கிடைத்தற்கரிய
மனிதப்பிறவியின் நோக்கமென்ன?

இவ்வாறு கேள்வியெழுப்பிய இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநில முதல்வர்
ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தா இன்று பலகோடி மனிதர்கள் எதற்காக
பிறந்தோம் என்று தெரியாமல் புல்பூண்டு போல அர்த்தமில்லாமல்
நோக்கமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்றார்.
மனிதப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதலே என்று சுவாமி பிரபு பிரேமானந்தா
அங்கு கூறினார்.

காரைதீவு இ.கி.மிசன் சாரதா இல்லத்தில் நேற்றுமுன்தினம்(26) திங்கட்கிழமை
சமயமந்ரதீட்சை தொடர்பாக மிசன் அபிமானிகளுடனான சந்திப்பொன்று
இடம்பெற்றது. அந்தசந்திப்பிலே மந்ரதீட்சை தொடர்பாக விளக்கவுரையாற்றிய
சுவாமி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்:
ஒருலட்சம்பேரில் ஒருவருக்கே இறையடி சேரும் நோக்கத்தை அறிய உணர
வாய்ப்புக்கிடைக்கின்றது.ஏனையோர் ஏதோ பிறந்துவிட்டோம் என்பதற்காக எவ்வித
நோக்கமுமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது மிருகவாழ்க்கைக்கு
ஒப்பானதாகும்.

தீட்சை என்றால் என்ன?
மந்திரதீட்சைக்கும் உலகவாழக்கைக்கும் பலர் முடிச்சுப்போடும்
காரணத்தினால்தான் அநேகமானோர் தீட்சை பெறாமலிருக்கிறார்கள். உண்மையில்
இவ்விரண்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
நீங்கள் கோவிலுக்குப்போய்வருவது போன்றுதான் இந்ததீட்சை பெறுவதும். தீட்சை
பெற்றால் மச்சம் சாப்பிடமுடியாது கல்யாணம் செய்யமுடியாது
மரணவீட்டிற்குச்செல்லமுடியாது என்றெல்லாம் பொய்க்கதை கட்டி
விட்டிருக்கிறார்கள். அப்படி ஒன்றுமே இல்லை. நீங்கள் அன்றாடம்செய்யும்
அனைத்த காரியங்களையும் தங்குதடையின்றிச் செய்யலாம். தீட்சை பெறுவதனால்
அதற்குத்தடையில்லை.

உடலால் ஆலயத்திற்குச்செல்கின்றொம். தீட்சை உள்ளத்தால் இளையை
வழிபடுகின்றொம். அவ்வளவுதான். மந்திரம் என்றால் இறநாமம்.இறைநாமத்தை
மந்திரத்துடன் சேர்த்து பல தடவைகள் சொல்கிறோம். அதுதான் தீட்சை.
புத்தபெருமான் சொல்கிறார் ஞானம்பெறுதல் என்று.அதுபோல் கிறிஸ்து
சொல்கிறார் சொர்க்கம் என்று. அனைத்துமதங்களும் சொல்கின்றன இறைவனை அடைதல்
என்பதே.

உலகவாழ்க்கையிலிருந்துகொண்டு இறைவன்திருவடியை அடையலாமா?

உலகவாழ்க்கையிலிருந்துகொண்டு இறைவன்திருவடியை அடையலாமா? என்பது பலரின்
கேள்வி. நான் சொல்கிறேன் ஆம் என்று.
கடலில் நீராடச்செல்லும் ஒருவன் அலை நிற்கட்டும் நான்நீராடுகிறேன் என்றால்
முடியுமா? அலை அடிப்பது என்றாவது நிற்குமா? இல்லை. கடல்அலைக்கு
மத்தியில்தான் நீராடவேண்டும்.
உலகவாழ்க்கையை முடித்துக்கொண்டு தீட்சை பெறுகின்றேன் என்றால் அது
முடியாது. சுகபோக வாழக்கையில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். இன்பமும்
துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.அதனூடாக இறைவனை அடைதல் எமது கடமை.

எனவே
உலகவாழ்க்கைக்கு மத்தியில் நாம் இறைதிருவடியை அடைதலே உள்ள ஒரேவழி.
பணக்காரர்வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரியின் நிலையைப்பாருங்கள். தனது
பிள்ளைகள் வாழவேண்டும் என்பதற்காக தான்வேலைசெய்யும் பணக்காரர்
வீட்டுப்பிள்ளைகளை தன்பிள்ளை மாதிரி சோறூட்டுகிறாhள் பராமரிக்கிறார்.
ஆனால்அவளுக்குத் தெரியும் இவர்கள் தன் பிள்ளைகளல்ல என்று. எனினும் அவள்
கடமையைச்செய்கிறாள்.தனது ஒரே நோக்கம் தன்பிள்ளைகள் சாப்பிடவேண்டும்
என்பதுதான்.
அதுபோல நாம் குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் எமது
குறிக்கோள் இறைவனை அடைதல் என்றால் நாம் அதையிட்டுப்பயணிக்கவேண்டும்.
ஆனால் உலகில் 100க்கு 99வீதமானோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்போல்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் நோக்கத்தை அறியாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


தீட்சை பெற்றவர்க்கே மதிப்பு!
உலகத்தில் யார் இறையடி சேர்கிறார்களோ அவர்களுக்குமட்டுமே மதிப்புக்
கிடைக்கிறது.நீஙகள் இப்பூவுலகில் எத்தனை கோடானுகோடி சேவைகளைச் செய்தாலும்
நீஙகள் இறந்தால் பின்னர் யாரும் நன்றியோடு
கதைக்கமாட்டார்கள்.அப்படித்தான் என்றாலும் ஒரு
தலைமுறைக்குக்கதைப்பார்கள்.
ஆனால் சுவாமி விபுலானந்தர் போன்று இறையடிசேர்ந்தவர்களை உலகம் என்றும்
மதிக்கும். அவரை நாம் வணங்குகின்றோம்.ஆனால் அவரது தாயாரை
நாம்வணங்குகின்றோமா? தந்தையாரை வணங்குகின்றோமா?

தீட்சைபெற குரு அவசியமா?
தீட்சை பெறுவதானால் ஒரு குருவினூடாகத்தான் பெறவேண்டும். குருவில்லா
வித்தை பாழ் என்பார்கள். குருவின்றி தீட்சை பெறமுடியாது.
குருவுக்குத்தான் அந்த சக்தி உண்டு. அவர் எமக்கு தீட்சை வழங்கும்போது
அவர் எம்மில் உள்ள பாவங்களை அவர் உள்வாங்கிக்கொள்கின்றார். நாம்
புதுமனிதனாகின்றோம்.
குருவருள் இருந்தால் மட்டுமே திருவருள் கிடைக்கும். மாதா பிதா குரு
தய்வம் என்பார்கள். இதற்கு அர்த்தம் பலருக்குத் தெரிவதில்லை.
உண்மையில் இறையடியை நாம் சென்றடைவதற்கு முதலில் வழிகாட்டுபவர் முதலில்
தாய்தான். பின்னர் தந்தை பின்னர் குரு . தெய்வத்தை வழிபடுவதற்கு முன்னர்
இவர்களை வழிபடலாமா? எனவே இறைவனை அடைவதற்கு வழிகாட்டுபவர்கள் இவர்கள்
என்பதே அர்த்தமாகும்.என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -