இலங்கை ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் முற்றுகை

வடக்கு, கிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வந்திருந்தனர்.

இந்த நிலையில் வடக்கினை சேர்ந்த மக்கள் மற்றும் தென்னிலங்கை சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி போராட்டம் ஒன்றிணை நடத்தியுள்ளார்கள்.

இந்த பேராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒரு பேருந்திலும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஒரு பேருந்திலுமாக மக்கள் சென்று கொழும்பு, கோட்டையில் இருந்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், தற்பொழுது ஜனாதிபதியை சந்திப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் எட்டு பேரை தெரிவு செய்து பொலிஸார் அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -