முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் மாவட்ட மட்டத்தில் மக்கள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதற்கமைய அடுத்த பேரணியை திருகோணமலையில் நடத்துவதற்கு மஹிந்த அணி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த பேரணி நடைபெறவுள்ளது.எதிர்வரும் 3ஆம் திகதி இந்த பேரணியை நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பேரணிக்கு முன்னர் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவிலும் சிறிய அளவிலான மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
