பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி பேரீச்சம்பழங்கள்


ஏ.எம்.றிசாத்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் ஏற்பாட்டில் இன்று காலை இப்பேரீச்சம்பழங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரமும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களுக்கு பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் தெரிவிக்கப்பட்டது

தற்போது புனித நோன்பு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், முகத்துவாரம் கிம்புலாஎல பகுதியிலுள்ளமேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் அலுவலகத்தில் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -