6 வயது சிறுமி மீது வாகனம் மோதி ஸ்தலத்திலேயே பலி வாகனத்துக்கு தீ -படங்கள்

க.கிஷாந்தன்-

நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது, கனரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமான நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் உயிரிழப்பால் சினமடைந்த பொதுமக்கள், கனரக வாகனத்துக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி உயிரிழப்புடன் சம்பவ இடத்தில் தீவிர நிலை ஏற்பட்டதாகவும், இதனை கட்டுப்பட்டுத்துவதற்கு விசேட அதிரடி படையினர், பொலிஸார், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தினால் அட்டன் நுவரெலியா ஊடான பொது போக்குவரத்து பல மணி நேரம் முற்றாக தடைப்பட்டள்ளன.

நானுஓயா நகரத்திலிருந்து பொலிஸ் வழியாக நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்திற்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த ஆக்காஷா தேவ்மிணி என்ற 6 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -