அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்-
தம்பலகாமம் - கிண்ணியா பிரதான வீதி கோயிலடி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் இன்றிரவு (03) 07 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம்.இலக்கம் 54 ஏ சிறாஜ்நகர் பகுதியைச்சேர்ந்த அப்துல் ஹமீது முகம்மது மலீக் (18வயது) எனவும் தெரியவருகின்றது. குறித்த இளைஞன் கிண்ணியா பிரதேசத்திலிருந்து EP BEZ 4209 எனும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நிலையில் மணல் ஏற்றச்சென்ற WP LC-4456 எனும் இலக்க டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் சடலம் கன்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.