கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையிலான சந்திப்பையடுத்து நாளை இசுருபாயவிலுள்ள கல்வியமைச்சில் தொண்டராசிரியர்கள் தொடர்பான விசேடக் கூட்டம் நாளை இ்டம்பெறவுள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியராச்சி மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகள் உட்பட கிழக்கு மாகாண சபை சார்பில் பிரதம செயலாளர்,கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்,
இதன் போது கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான பொறிமுறைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்படவுள்ளன.கிழக்கு முதலமைச்சரிடம் தொண்டராசிரியர்கள் அண்மையில் மகஜரொன்றை தமது நியமனத்தை துரிப்படுத்துமாறு கோரியிருந்தனர்.
இதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற அவசர சந்திப்பின் போது தொண்டராசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் இதன் போது விரிவாக எடுத்துரைத்திருந்தார்,
இதனையடுத்து கல்வியமைச்சுடன் இணைந்து இதற்கான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு முதலமைச்சருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் இதற்கமைவாக இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன் போது 2013 ஆண்டு வரையான தொண்டராசிரியர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என கிழக்கு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்ததுடன் இந்த விடயம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,
கிழக்கின் 445 தொண்டராசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுக் கொடுக்க கிழக்கு முதல்வர் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.