மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினால் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பம் காரணமாக, மக்களின் மின்சார பாவனை அதிகரித்துள்ளது. அலுவலகங்களிலும் மிக அதிகளவான மின்பாவனை காணப்படுகின்றது. அதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 10 வருடங்களின் பின்னர் 31 வீதம் வரை குறைவடைந்துள்ள காரணத்தினால் மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம், மின்சார சபை வேண்டுகோள் விடுக்கின்றது” என அத்துர வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.(AN)