மாணவர்களுக்கான உணவில் பாம்பு...!

ந்தியாவின் அரியானா மாநிலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்து பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அரசாங்கப் பாடசாலையொன்றில் நேற்று முன்தினம் பதினோராம் திகதி வியாழக்கிழமை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை தலைமை ஆசிரியர் வழமை போலவே ருசி பார்க்க சென்றார். அப்போது உணவில் செத்த நிலையில் பாம்புக் குட்டி ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர் மாணவர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டாம் என்று கூறித் தடுத்து விட்டார். அதன் பின்னர் அவர் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் பற்றித் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 
எஸ்.ஹமீத்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -