மூதூர் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) 95வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரின் முதல்வர் அல்ஹாஜ் A.H.M. பசிர் தலைமையில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாடில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி மே மாதம் 3ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
இக்கண்காட்சின் ஆரம்ப நாள் நிகழ்வின் பிரதம அதிதியான கிழக்கு மாகாண முதலைமைச்சர் கௌரவ. அல்ஹாஜ் பொறியியலாளர் ஹாபிஸ் நஸிர் அஹமட் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்ஆரம்ப நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வர் அவர்களும் கலந்துகொண்டார்.