மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்தவர், தீவிர இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிப்பவர், இந்தியாவின் உயர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவும், தான் இந்துக்களின் பாதுகாவலன் என்ற மாயயை உண்டுபண்ணுவதற்காகவும் முஸ்லிம்களை துண்புருத்தும் ஆயுதத்தை கையில் எடுத்தவர், இப்போதும் எடுத்துக்கொண்டு வருபவர்.
இவர் கடந்த காலத்தில் குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா ரயில் எறிப்பு சம்பவத்தை வேண்டுமென்றே நிகழ்த்திவிட்டு அந்த பழியை அப்பாவி முஸ்லிம்களின் மீது ஏவி நரவேட்டை ஆடியவர் ( இதனை குஜராத் உயர் நீதிமன்றமே உறுதிசெய்துள்ளது.) அதன் மூலம் நான் இந்துக்களின் கதாநாயகன் என்ற பெயரை ரத்தக்கரை மூலம் எழுதிக்கொண்டவர்.
இவரை இந்தியாவின் உயர் பதவிக்கு கொண்டுவரக் காரணமாக இருந்தது அமெரிக்காதான் ஏனென்றால். இந்த கலவரத்தை நடத்தி முடித்த மோடி அவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதற்கு விசா விண்ணப்பம் செய்திருந்தார் (இது திட்டமிட்ட நாடகம்) அந்த விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்தது மட்டுமல்ல, மோடி அவர்கள் மிகமோசமான இனவாதி என்றும் கூறியிருந்தது, இவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு எந்த தகுதியுமில்லை என்றுகூறி அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டதுபோல் நாடகமாடியது அமெரிக்கா.
இந்த செயல்பாடு மோடியின் பெயரை இந்தியாவின் பட்டிதொட்டி எல்லாம் பரவ காரணமாகி விட்டது, இதன் காரணமாக ஒரே நாளில் இந்திய இந்துக்களின் காவலன் மோடி என்ற என்னம் அத்தனை இந்துக்களின் மனதிலும் பதிவாக்கி விட்டது, இதன் காரணமாக அவர் திடீர்ரென இந்தியாவின் கதாநாயகனாக பார்க்கப்பட்டார், இந்த செயல்பாடு காரணமாகவே பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தார்கள்.
இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளாத அத்வாணி போன்ற மூத்த பி.ஜே.பி உறுப்பினர்கள் இவருடைய வருகையை கடுமையாக கண்டித்தது மட்டுமல்ல மோடிக்கு பின்னால் மேற்குலகம் உள்ளது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்கள். மேற்குலகம் நினைத்ததுபோன்றே மோடி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார், அதன் பிற்பாடு மோடிக்கு செங்கம்பல வரவேற்பு கொடுத்தது அமெரிக்கா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
உலக வரலாற்றில் அமெரிக்கா யாரைப்பார்த்து விமர்சிக்கின்றதோ அவர்கள் எந்தப்பதவியிலிருந்தாலும் கடைசிவரையும் அவர்களை அங்கீகரிக்காது,(சதாம், கடாபி, காஸ்ட்ரோ, மஹிந்த) போன்றவர்களை என்னபாடுபடுத்தியது இந்த அமெரிக்கா என்பதை இந்த உலகமே அறியும், அப்படிப்பட்ட அமெரிக்கா மோடி விடயத்தில் நடந்து கொண்ட முறையைப் பார்த்தால் புரியும் இவர்கள் யார் என்று.
மஹிந்த புலிகளை அடக்கி இலங்கை நாட்டில் அமைதியை ஏற்படுத்திய விடயம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது, எந்த கெரில்லா போரையும் முற்றாக அழித்த வரலாறு கிடையாது அதனை மஹிந்த சாதித்துக்காட்டியது மட்டுமல்ல, யுத்தம் முடிந்ததன் பிற்பாடு ஒரு வெடிச்சத்தம் கூட இலங்கையில் கேற்கவில்லை, அப்படி பாதுகாப்பான நாட்டை உருவாக்கிய மஹிந்தவை பாராட்டுவதை விட்டுவிட்டு, இதைவிட மோசமான இனப்படுகொலையைச் செய்த மோடிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன என்றால் இதற்கு பின்னால் இருந்து செயல்படும் சக்தி என்னவென்பதை மக்கள் புரிந்துகொள்ள நேரமெடுக்கும் என்பதே உண்மையாகும்.
இலங்கையில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த மோடியை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது, அதுமட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக மோடியை நன்றாக பயன்படுத்துகின்றது, அன்று மோடியின் அநியாயங்களை தட்டிக்கேட்ட அமெரிக்காவுக்கு இன்று மோடி செய்யும் அநியாயங்கள் கண்ணுக்கு படவில்லை, காஷ்மீர் மக்களை சர்வதேச சட்டங்களை மீறி கொடூரமாக நடந்துகொள்கின்றது இந்த மோடி அரசு, அதனை சாட்டுக்காவது கண்டிப்பதற்கு அமெரிக்காவுக்கு நேரமில்லை, நேரம் இருக்காதுதான் ஏனென்றால் அங்கே கொல்லப்படுவது முஸ்லிம்கள் அல்லவா..?
ஆகவே, இலங்கை முஸ்லிம்களும் யார் சதிகாரன் யார் நண்பன் என்று புரிந்துகொள்ள ஆராய்ந்து பார்க்கவேண்டும், இலங்கையிலும் அந்த சதி அரங்கேருகிறது, நமது மக்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் உலகத்தின் சதிநாசகார செயல்களுக்குல் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பழகிக்கொள்ளவேண்டும். அப்படி நாம் உணர்ச்சிகளுக்கும், கோசங்களுக்கும் அடிமைப்பட்டோமேயானால் நமது சமூகம் ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துவிடும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
இருந்தாலும் இலங்கை முஸ்லிம் தலைவர்களும் மோடிக்கு மாலை அணிவிக்கின்றார்கள் பரவாயில்லை அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றார்கள். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் ஒருகாலும் இதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே எங்கள் என்னமாகும்.
எம்.எச்.எம் இப்றாஹிம்.
கல்முனை.
