திருகோணமலை கேனேஷ்வரர் ஆலயத்திற்கருகில் தொள் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் சட்ட விரோதமான முறையில் கடையொன்றினை கட்டச்சென்றவரை ஜூன் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு இன்று (29) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை.ரேவதபுர பகுதியைச்சேர்ந்த எச்.கே.அஜித் (38வயது) எனவும் தெரியவருகின்றது.
திருகோணமலை கோனேஸ்வரா ஆலயத்திற்கு செல்லும் வழியில் சிறிய கடையொன்று காணப்பட்டிருந்த போதிலும் அக்கடையை எவ்வித அனுமதியுமின்றி விசாலமாக தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் கட்டுவதற்கு முயற்சித்த வேளை கைது செய்ததாகவும் தெரியவருகின்றது.