பாறுக் ஷிஹான்-
கிளிநொச்சியின் புற நகர்ப் பகுதியில் அதிகாலையில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது இன்று(19) அதிகாலை பளை பகுதியில் கடமையில் இருந்த 119 பொலிஸ் வாகனம் மீது இத் தூப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பளை பொலிஸார் அங்கு கடமையில் இருந்துள்ளனர்.
இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் அதிகாலை 01 மணி இடம்பெற்றதுடன் அப்பகுதியில் இருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட ரி-56 துப்பாக்கியின் பாகம் தற்போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பொழுது இராணவத்தால் இந்தப்பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது வீதி ரோந்து சென்ற பொலீசாரின் வாகனம் சிறு சேதமடைந்த தோடு இரு பொலிசாரும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்திற்கு T-56ரகக் துப்பாக்கியை பயன்படுத்தி சூடப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
