வடக்கு மாகாணப் பட்டதாரிகள் கவன ஈர்ப்புப் போராட்டம்..!

பாறுக் ஷிஹான்-
ரச வேலைவாய்ப்புக் கோரி போராட்டாத்தில் ஈடுபட்டிருக்கும் வடக்கு மாகாணப் பட்டதாரிகளின் போராட்டம் 70 நாட்களைத் தாண்டிய நிலையில் 72 ஆவது நாளான(9) செவ்வாய்கிழமை காலை 08 மணிமுதல் வடக்கு மாகாண சபையை முடக்கி நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை கவனஈர்ப்புப் போராட்ட்தில் பங்கேற்று தமக்கு ஆதரவு வழங்குமாறு வடக்கு மாகாணப் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளின் போராட்டம் 75 நாட்களைக் கடந்த நிலையில் அவர்களிற்கான வேலைவாய்ப்புக்களை உடனடியாக வழங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவாதமளித்துள்ள நிலையில் வடக்கு மாகாண பட்டதாரிகளிற்கான நியமனங்களையும் தமது 70 நாள் போராட்டத்தை மதித்து வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் பட்டதாாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -