அட்டாளைச்சேனையை துப்பரவு பணியில் ஈடுபடவைத்த அமைச்சர் நஸீர் (படங்கள்)

சப்னி அஹமட்- 
னாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரத்தினை கிழக்குமாகாண சுகாதார அமைச்சு கிழக்கு மாகாணம் முழுவதும்நடைமுறைப்படுத்திவருகின்றது. அந்தவகையில் அட்டாளைச்சேனை சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாடில் அட்டாளைச்சேனை பிரதேசம்முழுவதும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று (26)அட்டாளைச்சேனை பிரதான வீதியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் பங்குபற்றதலுடன் விசேட சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதான வீதிகளில் உள்ள வடிகான்களும் அதனை அண்டியபிரதேசங்களும் அசுத்தமைடந்து காணப்படுவதுடன், டெங்கு ஆபத்து மீண்டும்தலைதூக்கியுள்ள நிலையில் இதனை தடுபதற்காகவே இத்திட்டம்மேற்கொள்ளப்பட்டடாதா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

வடிகானுள் வீட்டுக்கழிவுகள், கடைக்கழிவுகளை செலுத்துதல் தங்களது எல்லைக்குள்வைத்துக்கொள்ளுமாறும், திண்மக்கழிவுப்பொருட்களையும் குப்பைகளையும் பிரதேசசபை மூலம் அகற்றுவதற்குரிய ஏதுவான இடத்தில் வைக்குமாறும், கட்டிடநிமாணத்திற்கு பாவிக்க கூடிய கல், மண்ணை வீதியோரங்களிலையோ,வடிகான்களிலையோ இடமால் தங்களது சொந்த இடங்களில் வைக்குமாறும்,வடிகானுள் நீர்களை ஓடவிடக்கூடியவாறு வைக்குமாறும், தங்களது வீடு, கடை,வெற்று வளவு ஆகியவற்றை சுத்தமாக வைக்குமாறு அறிவுறுத்தல்வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வெற்றுவளவுகளுல் டெங்கு நோய்அச்சமுள்ள இடங்களில் சிவப்பு எச்சரிக்கை படிவம் இடப்பட்டதுடன் வடிகான்கள்,வீதிப்பிரச்சினைகள் சில அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதன் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், மாவட்டநீதிபதி அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ், சத்திர சிகிச்சையாளர் வைத்தியர் மனாப் ஷரீப், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ், அட்டளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ்,அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் ஏ.எல். கமுர்தீன் ஆகியோருடன், அரசஉத்தியோகத்தர்கள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள்கலந்துகொண்டு துப்பரவு பணியில் ஈடுப்பட்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -