சாய்ந்தமருது தாருல் இல்மு ஆங்கில கல்வியகத்தின் விருது வழங்கும் நிகழ்வு..!

எஸ்.அஷ்ரப்கான்-
சாய்ந்தமருது தாருல் இல்மு ஆங்கில கல்வியகத்தின் வின்டோ விருது வழங்கும் நிகழ்வு எல்.சி.வி.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் முஹம்மட் ஜவாஹிர் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களும் கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட விரிவுரையாளர் றமீஸ் அபூபக்கர் மற்றும் டாக்டர் என்.ஆரிப் மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட கல்வி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுமார் 200 மேற்பட்ட மாணவர்கள் சாய்ந்தமருது தாருல் இல்மு ஆங்கில கல்வியகத்தின் தலைமை கல்வி நிறுவனத்தினால் நடைபெற்ற பரீட்சையில் 100 வீதம் புள்ளி பெற்ற மற்றும் சித்திபெற்ற மாணவர்களுக்கு நினைவுப்படிகம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிப்பட்டது. 

தாருல் இல்மு கல்வியகத்தின் பணிப்பாளர் ஆசிரியர் றியாஸ் மற்றும் செயலாளர் ஆசிரிய ஆலோசகர் றாசீக் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -