அப்துல் ஹுசைன்-
மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 மாத சிங்கள மற்றும் ஆங்கில மொழி டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 75 தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதாக அந்த அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம். ஸாதிக் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (23.05.2017) கிரானிலுள்ள “றெஜி” கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்படி சகோதர மொழியான சிங்களத்தையும் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் எழுத, பேச, வாசிக்கக் கற்றுக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் இளைஞர் யுவதிகளால் பல்வேறு மொழிப் புலமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் மேடையில் நிகழ்த்தப்பட்டன.
இவை அங்கு வருகை தந்திருந்த அதிதிகளால் மிகுந்த வரவேற்பைப் பெற்றுப் பாராட்டப்பட்டதாக மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் மாவட்ட பொதுச் செயலாளர் எச்.எம். அன்வர் தெரிவித்தார்.
இதேவேளை சிவில் சமூகப் பணிகளில் தமது பங்களிப்பைச் செய்த பிராந்திய ஊடகவிலாளர்கள் மூவருக்கு பொன்னாடை போரத்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் 23வது கட்டளைத் தளபதி எச்.டபிள்யூ.எஸ்.டி.பி. பனவல ( (Panawala)) 231வது படைப் பிரிவின் பிரிகேடியர் என்.டி.எஸ்.ரி. நிவன்ஹெல ( NDST. Niwanhela) சித்தாண்டி 11வது ஆர்ட்டிலறி பிரிவின் மேஜர் சுதர்ஷன வீரசிங்ஹ, ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ், கல்குடா கல்வி வலய அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஷாமினி ரவிராஜா ஆகியோரும் டிப்ளோமா பாடநெறியை முடித்துக் கொண்ட பயிலுநர்களும் கலந்து கொண்டனர்.