ஹஸ்பர் ஏ ஹலீம்-
பிரித்தானியா உயர்ஸ்தானிக தூதரகம் மற்றும் ஆசிய அமைப்பு ஆகியவள்றின் நிதியுதவியுடன் தேசிய சமாதான பேரவையினால் அனைத்து இன மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (15) மாலை திருகோணமலை வாடிவீடு விடுதியில் இடம்பெற்றது .இன மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் புரிந்துணர்வு சமாதானத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றினூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் இது தொடர்பான நோக்கங்களை சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி எம்.ஏ.சதுராணி தெளிவுபடுத்தினார்.
மேலும் இவ் கலந்துரையாடலில் மூவினத்தையும் சேர்ந்த மதகுருக்கள் தங்களது மதங்கள் தொடர்பான இஒற்றுமைகளையும் மதங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் தெளிவுபடுத்தினர்.குறிப்பாக ஊடகவியலாளர்களும் இதில் பங்கேற்றதுடன் தங்களுடைய மத நல்லிணக்கம் தொடர்பான கேள்விகளையும் தொடுத்தனர்.மதகுருக்கள் சக்தி நிறுவன தொண்டர் குழு ஊடகவியலாளர்கள் என பலரும் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

