கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயாவின் பட்டமளிப்பு விழா..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூரியின் 11ஆவது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா மற்றும்12ஆவது தலைப்பாகை சூட்டும் விழா மற்றும் ஜவாதுல் ஜாமிஆ எச்.எம்.பீ. முகைதீன் ஹாஜியார் மண்டப திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் நாளை மறுதினம் (17) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூயின் கலாபீட கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூயின் கலாபீட அதிபர் மௌலவி பீ.எஸ். முஹம்மது அலி (அன்வாரி பாஸில் மளாஹிரி - இந்தியா) தலைமையில் கலாபீட ஆளுனர்சபைத்தலைவர் எஸ். எல். மீராசாஹிப் முன்னிலையில் இடம்பெறும் இவ்விழாவில், கலாபீட மாணவர்கள், பெற்றோர்கள், ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -