இனியாவது வாக்களித்த மக்களை பார்ப்பீர்களா ..?? முஸ்லிம் தலைவர்களே

ஒலுவில் ஜெலில்-

முஸ்லிம் அமைச்சர்களே இனியாவது உங்களுக்கு விளங்குமா? இனியாவது உங்களுக்கு வாக்களித்த அந்த மக்களைப்பத்தி சிந்திப்பீர்களா?  உங்களுக்கு மக்களின் பாதுகாப்பை விடமார்க்கத்தை விட, சமுகத்தின் கொளரவத்தை விட, ஏழைகளின் கண்ணீரை விடவும். அமைச்சு பதவியும், வாகனங்களும், சொகுசு வாழ்கையும்,உல்லாச பயணங்களும், உங்கள் பாதுகாப்பும்தான் முக்கியம் என்று கண்ணை மூடிக்கொண்டிருக்கிறீர்களா?

முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், காவிஉடை அணிந்தவர்களுக்கு ஒரு சட்டம், அதிலும் அந்த நச்சுப் பாம்பு ஞானசாரவுக்கு ஒரு சட்டம் இதைத்தானா செல்லுவது எல்லோருக்கும் ஒரே சட்டம் என்று? இது சரியென்று உங்கள் மனசாட்சி செல்லுகிறதா அமைச்சர்களே?

முஸ்லிம் பெயர்தாங்கி ஊமை அமைச்சர்களே நேற்று இரவு ஞாசாரவை கைது செய்ய இந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சென்றதாகவும். அங்கு அவர்களை கைது செய்ய விடாமல் தடுத்ததாகவும் அறியக்கிடைத்தது.

உண்மையில் இது ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் கேவலமாக தெரியுதோ இல்லையோ. அரசிக்கு முட்டுக் கொடுத்திருக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு இது கேவலமே.

எத்தனையோ இடங்களுக்கு சென்று பலவிதமான ஆயுதங்களுடன் இருந்தவர்களைகூட இலகுவாக கைது செய்து கொண்டுவரும் இந்த பாதுகாப்பு படைகளுக்கு இந்த ஞானசாரவை கைது செய்ய முடியாமல் போனது வேடிக்கையாக தெரிய வில்லையா உங்கள் கண்களுக்கு ?

உங்களைப்போன்ற அமைச்சர்களை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகத்தை அரசாங்கம் இலகுவாக அரங்கேற்றி.கண் துடைப்பை செய்துள்ளது அவ்வளவுதான் இதுதான் உண்மை.

இதற்குப்பிறகும் ஞானசாரவைப் போன்றவர்களை கைது செய்யவும் போவதில்லை நீதியை நிலைநாட்டவும் மாட்டார்கள் முஸ்லிம்கள் விடயத்தில். வேண்டுமென்றால் அவர்களாகவே வந்து காவல் நிலயத்தில் ராஜ மரியாதையுடன் உரையாடிவிட்டு பாதுகாப்புடன் திரும்பி செல்லுவார்கள் இதுதான் நடக்கப்போகுது.

அமைச்சர்களே அல்லாஹ்வுக்காக உங்கள் பதவிகளை வைத்துக்கொண்டு. அரசுக்கு கடிதம் எழுதுவதையும், அறிக்கை விடுவதையும், கூட்டம் போட்டு படம் காட்டுவதையும் நிறுத்திவிட்டு. எல்லோரும் சேர்ந்து நீதியை நிலைநாட்ட முடியாத இந்த அரசுக்கு காரசாரமான அழுத்தத்தை கொடுத்து எல்லோருக்கும் சமமான நீதியை நிலைநாட்டி முஸ்லிம் மக்களின் இருப்பையும் உறுதி செய்யுங்கள்.

வெறுமெனமே இந்த ஞானசாரவை கைது செய்து விடுதலை செய்வதனால் ஒன்றும் ஆகபோவதில்லை. மாறாக சட்ட ஒழுங்கை நிலையாட்டி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்காகவே உங்கள் வாய்கள் திறக்கப்பட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இல்லாது உங்களால் அப்படி அழுத்தம் கொடுக்க முடியாவிட்டால்.பதவிகளை துறந்துவிட்டு பிள்ளைகளையும், போரப்பிள்ளைகளையும் பார்த்துகிட்டு வீட்டில் இருங்கள் அதுவே மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவியாகும்.

இல்லாது தயவுசெய்து ஜனாதிபதியுடன் பேசுகிறேன் பிரதமரை சந்திக்கிறோம் DIG க்கு கடிதம் எழுதுகிறோம் என்றுமட்டும் பழைய பல்லவியை கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -