எம்.ரீ.ஹைதர் அலி-
இலங்கை நாட்டின் மத்திய கல்வியமைச்சின் ஏற்பாட்டில் சீனா நாட்டில் நடைபெறவுள்ள அதிபர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம். பைசல் அவர்கள் 2017.05.09ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 07:00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சீனா நோக்கி புறப்பட்டார்.
சீனா நாட்டின் Jinhua, Zhejiang Province யிலுள்ள Zhejiang Normal University இல் Seminar On Primary and Secondary School Teachers from Development Countries - 2017 எனும் தலைப்பில் 2017.05.11 தொடக்கம் 2017.05.31ஆந்திகதி வரை நடைபெறவுள்ள அதிபர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே சென்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் அதிபராக எம்.எல்.எம். பைசல் அவர்கள் காணப்படுகின்றார்.