திருகோணமலை : துவிச்சக்கர வண்டியுடன் வேன் மோதி விபத்து - ஒருவர் பலி

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. நிலாவௌி பிரதான வீதியில் இன்று (13) மாலை 5.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியுடன் வேனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவௌி. கோனேஷபுரி சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசித்து வரும் பீ.கமல் ராஜ் (36வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளதுடன் வேனின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -