அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மோறாகம புராதன விகாரையொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் தலா ஒரு இலச்சம் ரூபாய் வீதம் அபராதம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க நேற்று (22) திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இவ்வாறு அபராதம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்ட்டவர்கள் கெக்கிராவ-டிப்போ வீதியைச்சேர்ந்த மகலியனகே அனுர (48வயது) சியபலாகுலம,கோடாமடுவ பகுதியைச்சேர்ந்த எஸ்.ஆர்.சஞ்ஜீவ ஜெயசிங்க (42வயது) கெபிலிவெல,தங்குள்ள பகுதியைச்சேர்ந்த எல்.சந்தன சமன்குமார (45வயது) மற்றும் கோன்வெவ.உபுல்தெனிய பகுதியைச்சேர்ந்த கயான் சம்பத் மாரசிங்க (41வயது) எனவும் தெரியவருவருகின்றது.
தொல் பொருளை தோண்டியமை. தொல் பொருளுக்கு நஷ்டம் விலைவித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் பொலிஸாரினால் சுமத்தப்பட்டிருந்ததுடன் அக்குற்றம் இரண்டிற்குமாக ஒருவருக்கு ஒரு இலச்சம் ரூபாய் வீதம் நால்வறுக்கும் அபராதம் விதிக்கப்ட்டது.
குறித்த நான்கு பேரும் கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி புராதன விகாரையில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதுடன் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.