இலங்கையின் இனவாதியாக செயற்பட்டு வரும் ஞானசார தேரர் இன்று தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கனேசனை அவரது அமைச்சில் சந்தித்து தனத இனவாதக் கருத்துக்களை கக்கியிருந்தார்.
இதன்போத வீட்டின் உரிமையாளர்கள் இருக்கும் போது வாடகைக்கு இருப்பவர்கள் எதைப்பற்றியும் கதைக்க கூடாது என தெரிவித்து நாட்டின் உரிமையாளர்கள் சிங்களவர்கள் என்றும் வாடகைக்கு இருப்பவர்கள் சிறுபான்மையினர் என்றும் தனது உரையாடலில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் அமைச்சர் மனோ கனேசன் இந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என்றும்,அவர் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கே பொருத்தமானவர் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ இந்தப் பதவிக்கு தான் தகுதியானவன் என்று தான் உணர்வதாகவும்,யாருக்கு எந்தப் பதவி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
LIVE360
