கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு கணடா ஒத்துழைப்பு - அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்- 
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையினையும், சுதேச வைத்தியத்துறையினையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தில் கணடா நிருவனங்கள் உதவிவருகின்றது. அந்தவகையில்; கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கானஓர் கட்டமாக கணடா வைத்தியர் குழுவொன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இன்று (19) கிழக்கு மாகாணசபையில் இடம்பெற்றது. சக்தி வாய்ந்த ஓர் சுகாதார அபிவிருத்து கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டு வர வேண்டும், அதற்காக சிறந்து சுகாதார அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு கணடாவின் உதவி தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக அங்கு வருகை தந்த வைத்தியர் ப்ரன்சிஸ் தெசிஸ்சர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதாரத்துறையின் அபிவிருத்தி மேலும் வலு சேர்க்குமுகமாககணடா நிருவனங்களின் பங்களிப்பு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும்உள்ளதாகவும் இதன் மூலம் கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அபிவிருத்திகளை நாம் மேலும் பெறுவதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமலும் பெற வேண்டியது எமது கடமை என கிழக்கு மாகாணசுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சுதேச துறையின் மாகாணப்பணிப்பாளர், சுதேச வைத்திய துறை வைத்தியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -