சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பிள்ளைகளின் தாய் ரிஸ்வானாவுக்கு உதவுங்கள்..!

இக்பால் அலி-
பொலன்னறுவை கதுருவெல இலக்கம் 30 முஸ்லிம் கொலனி பகுதியை வதிவிடமாகக் கொண்ட 36 வயதுடை ஏ.ஆர்.ரிஸ்வானா மூன்று பிள்ளைகளின் தாயுமாவார். சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக தலைவலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட பல நோய்களுக்கு உட்பட்ட நிலையில் இறுதியாக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வேளையில் சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இரத்தப்பரிசோதனையின் பின் தற்போது இந்த தாயின் இரு சிறு நீராகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் இவர் உயிர் பிழைப்பதாக இருந்தால் ஒரு மாத கால குறுகிய காலத்திற்குள் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார். 12, 10, 06 வயதடைய பிள்ளைகள் மூவர் உள்ளனர். இந்த தாய்க்கு தற்போது தினசரி உடம்புக்கு 500 மில்லிலீட்டர் இரத்தமம் பாய்ச்சப்படுகிறது. மிகவும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள இந்த தாய்க்கு பொருத்தமான குருதி வகையைச் சார்ந்தவர்கள் சிறு நீரகத்தை தானம் செய்து இந்த தாயின் உயிரை மீட்டெடுப்தற்கு காருண்ணிய உதவி செய்யயுமாறு இவரது குடும்பத்தவர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சிறு நீரகத்தை தானம் செய்பவர்கள் 0776199745, 0776562497 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -