அஸ்மினை நீக்கினால் இன்னுமொரு முஸ்லிம் உறுப்பினரை நியமிக்க முடியாது - தேர்தல் ஆணையகம்

அப்துல்லா-
டக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களை நீக்கிவிட்டு அவ்விடத்திற்கு புதிய ஒரு முஸ்லிம் உறுப்பினரை நியமிக்க உத்தேசித்துள்ளதாக ஊடக அறிக்கை மூலம் அறிவித்திருந்தது. இது தொடர்பில் அய்யூப் அஸ்மின் அவர்கள் பதவி விலகக்கூடாது என்று வடக்கின் பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் பிரமுகர்களும் கருத்து வெளியிட்டு வந்த நிலையில் யாழ் முஸ்லிம் பிரதிநிதிகள் சிலர் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அவர்களையும் கொழும்பு தேர்தல் ஆணையகத்தையும் தொடர்பு கொண்டு விளக்கமொன்றினைக் கோரியிருந்தனர். அதன் பிரகாரம் அஸ்மின் அவர்கள் இராஜினாமா செய்யும் பட்சத்தில் அவருடைய இடத்திற்கு மற்றுமொரு உறுப்பினரை நியமிப்பதில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்றும், இன்னுமொரு முஸ்லிம் உறுப்பினரை நியமிக்க முடியாது என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேர்தல் ஆணையாளரின் கருத்துக்கு அமைவாக: 1988ம் ஆண்டின் 2/61 ஏ சட்டத்தின் பிரகாரம் குறித்த ஒரு மாகாணத்தின் கீழ்வருகின்ற மாவட்டங்களில் குறித்த ஒரு கட்சிசார்பாக தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று வெற்றியடையாத உறுப்பினர்களையே குறித்த கட்சிக்கு வழங்கப்படுகின்ற இரண்டு மேலதிக ஆசனங்களுக்கு நியமிக்க முடியும். அவ்வாறு நியமிப்பவர்கள் குறித்த பெயர் விபரங்களை வெற்றியீட்டிய கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் வழங்கிவைப்பார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் போட்டியடாத ஒருவரை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்க முடியாது என்பது வெளிப்படை. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 5 மாவட்டங்களின் பட்டியலிலும் வேறு எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரும் களமிறக்கப்படவில்லை என்பது நிதர்சனமாகும். 


தற்போதைய வடக்கு மாகாண வேட்பாளர் பட்டியலின் பிரகாரம்; மன்னார் மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 2 வேட்பாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 4 வேட்பாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் இதுவரை மாகாணசபை உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளாத உறுப்பினர்களாகும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு உறுப்பினர் ஒருவருடகால மாகாணசபை உறுப்பினர் பதவியை வகித்தாலும் தற்போது பதவியில் இல்லாத ஆனால் வேட்பாளர் பட்டியலில் அடுத்த நிலையில் இருக்கும் உறுப்பினராக இருக்கின்றார், எனவே வடக்கு மாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் நியமிப்பதற்குத் தகுதியுடைய உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் வெளியில் இருந்து ஒரு உறுப்பினரை உள்ளீர்ப்புச் செய்வதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன.

அவ்வாறு ஒரு உறுப்பினரை வெளியில் இருந்து நியமிக்கின்றபோது இதுவரை நியமனம் பெறாத உறுப்பினர்களோ அல்லது நியமனம் பெற்ர உறுப்பினர்களோ நீதிமன்றத் தடையுத்தரவைக் கோரினால் அவ்வாறான ஒரு நியமனம் சிரமசாத்தியமானதாக அமையும் என சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு நோக்குகையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களுடைய இடத்திற்கு மற்றுமொரு முஸ்லிம் உறுப்பினரை நியமிக்க முடியாத சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது என யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -