'எங்கள் ஆசான்களுக்கு ஒரு மணிமகுடம்' எனும் நிகழ்வின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் 2000ம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் வைரூகே (லு2மு) ஸ்டார் அமைப்பின் செயற்குழுத் தலைவர் எம்.ஐ. முபாறக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 14.05.2017 இரவு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 24 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன், அலிகார் தேசியக் கல்லூரி அதிபர் எஸ்.ஏ. நஜீப் உட்பட முன்னாள் கல்வி அதிகாரிகளும், அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.





