ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு வவுணதீவு விளாவட்டவானில் மீனவர் முதலையிடம் சிக்குண்டு மரணமாகியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். விளாவட்டவானைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அல்லிமுத்து விக்கிரமசிங்கம் (வயது 60) எனும் மீனவரின் சடலமே வெள்ளிக்கிழமை (12.05.2017) மீட்கப்பட்டது.
இச்சம்பவம்பற்றித் தெரியவருவதாவது, இந்த மீனவர் வழமைபோன்று கடந்த வியாழக்கிழமையன்று இரவு 8 மணியளவில் விளாவட்டவான் கிராம ஆற்றில் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். எனினும், அவர் வீடு திரும்பாததால் உறவினர்களும் நண்பர்களும் அவரைத் தேடியுள்ளனர்.
இவ்வேளையில் விளாவட்டவான் வள்ளியப்பட்ட ஓடை பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது. இவ்வேளையிலேயே மேற்படி ஆற்றில் மீனவர் முதலலையிடம் அகப்பட்ட விடயம் தெரிய வந்து சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

