இரட்டைப் பிஜா உரிமை உள்ள ஒருவர் எம்பி பதவியை வகிக்க முடியாது என்ற 19 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பிரபல சிங்கள நடிகையும் மஹிந்த அணி எம்பிம் சுவிஸ்- இலங்கை இரட்டைப் பிரஜா உரிமை உள்ளவருமான கீதாகுமாரசிங்கவின் எம்பி பதவியை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.
ஆனால்,நீதிமன்றத் தீர்ப்பை அவரது எதிரிகள் முன்கூட்டியே அறிந்துவைத்திருந்தனரா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.அதற்குக் காரணம்இதுதான்.
தீர்ப்பு வழங்கப்பட்டதும் அதைக் கொண்டாடுவதற்கு கீதாவின் அரசியல் எதிரி ஒருவர் சில ஏற்பாடுகளைச் செய்தாராம்.தீர்ப்பு வெளியாவதற்கு முதல் நாள் இரவுஅந்த அரசியல் புள்ளி தனது ஆதரவாளர்களிடையே பட்டாசுகளைபகிர்ந்துகொண்டாராம்.
தீர்ப்பு காலை அறிவிக்கப்பட்டதும் அனைவரும் பட்டாசுகளைக் கொழுத்தி மகிழவேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தாராம்.இந்தச் செய்தி அன்றிரவே கீதாவின்காதுகளுக்கு எட்டிவிட்டது.தீர்ப்பு தனக்கு எதிராக அமையப் போகின்றது என்பதைஅவர் அறிந்துவிட்டார்.
