விஷேட குழு ஒரு மாதத்துல் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு - ஜனாதிபதி செயலகம்

ன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் அவர்களது தலைமையில் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட வன பாதுகாவல் திணைக்கள அலுவலர்களும் இக் கலந்துரையாடலில் கலந்த கொண்டனர். அப் பிரதேச மக்கள் சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தால் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்தரையாடப்பட்டது.

இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்மைய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன் அந்த அறிக்கை ஒரு மாத காலத்தினுள் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -