ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் தன்னாமுனை என்ற இடத்தில் புதன்கிழமை பிற்பகல் 31.05.2017 இடம்பெற்ற வீதி விபத்தில் இரு மாடுகள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதோடு வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வீதியில் மோட்டார் சைக்கிளில் அதி வேகமாகப் பயணித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குறுக்கறுத்த மாடுகளை மோதியுள்ளார். அவ்வவேளையில் மாடுகள் இரண்டும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போக்கு வரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இசச்ம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.