ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு நகரில் மனித நுகர்வுக்கு உதவாத உணவுகளை மலசல கூடத்திற்குள் வைத்து பராமரித்து பாதுகாத்து தயாரித்த விற்பனை செய்து வந்த உணவகம் ஒன்று செவ்வாய்க்கிழமை 30.05.2017 மாலை சீல் வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
தகவல் ஒன்றை அடுத்து உடனடியாக 10 நிமிட இடைவெளியில் சம்பந்தப்பட்ட உணவகம் சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவுகள் பத்திரப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ். அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு அந்த உணவகத்தைப் பரிசோதித்து அங்கிருந்த மனித பாவனைக்கு உதவாத உணவு வகைகளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 09 பேருக்கும் மருத்துவச் சான்றிதழ் இல்லாதிருந்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டதாகவும் அவர்களில் சிலருக்கு தோல் நோய்கள் மற்றும் சிரங்குகளுடன் சரீரத்தில் காயங்கள் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனடியாக உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா ஆயபளைவசயவந யனெ யுனனவைழையெட னுளைவசiஉவ துரனபந ஆயnமைமயஎயளயபயச புயநௌhயசயதயா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது உணவக உரிமையாளரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்த நீதிவான் வழக்கை எதிர்வரும் 15 ஆம் திகதியன்று வழக்கு விசாரணை இடம்பெறும் என்று உத்தரவிட்டார்.
வியாபார அனுமதிப்பத்திரம் இல்லாமல் உணவகத்தை நடத்தியது மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவகளை பாதுகாத்து பத்திரப்படுத்தி வைத்திருந்து அவற்றைத் தயாரித்து விற்பனை செய்தமை உள்ளிட்ட இரு வேறு வழக்குகள் உணவக உரிமையாளருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
15ஆம் திகதி பொதுச் சுகாதாரப்; பரிசோதகர்களினால் சமர்ப்பிக்கபப்டும் அறிக்கையைப் பொறுத்தே மேற்படி உணவகத்தை மேற்கொண்டும் நடத்த முடியுமா என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.