அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் நான்காயிரம் இந்து மக்கள், மத மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
மத மாற்றம் இனிமேலும் இடம்பெறாத வகையில், அனைத்துக் கோவில்களும் ஆரம்பக் காலத்தைப் போன்று அறத்தைப் போதிக்கும் மற்றும் கலைக்கூடங்களாக மாற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்;தார்.
திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருமூலர் திருமடத் திறப்பு விழா, சனிக்கிழமை (27) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். த.மி