கிழக்கின் ஆசிரியர் வெற்றிடம் தவிர்ந்த ஏனைய 2 ஆயிரத்து 765 வெற்றிடங்களும் நிரப்புவதற்கான அனுமதியை உடனடியாக தர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கிழக்கு முதலமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் கல்வியமைச்சு ஆகியவற்றில் உள்ள வெற்றிடங்களே உடனடியா நிரப்பப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
ஹபரணையில் இடம்பெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலேயே ஜனாதிபதி முன்னிலையில் கிழக்கு முதலமைச்சர் இந்தக் கோரிக்கையினை விடுத்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர்,
இது தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தின் அனுமதிக்காக அனுப்பியிருந்த நிலையிலேயே இந்த வெற்றிடங்கள் நிரப்பபட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இனடிப்படையில் முதலமைச்சின் கீழ் 331 வெற்றிடங்களும், சுகாதார அமைச்சில் 341 வெற்றிடங்களும். விவசாய அமைச்சில் 558 வெற்றிடங்களும் மற்றும் கல்வியமைச்சில் 1535 வெற்றிடங்களும் உள்ளடங்கலாக 2 ஆயிரத்து 765 வெற்றிடங்கள் கிழக்கு மாகாண அமைச்சுகளின் கீழ் உள்ளதுடன் அவை நிரப்பபடுவதுடன் ஊடாக மக்களுக்கான சேவைகளை மேலும் செயற்திறன் மிக்கதாய் மாற்ற முடியும் என கிழக்கு முதலமைச்சர் கூறினார்.
அத்துடன் மாகாணத்தில் ஏற்கனவே வேலையற்றேோர் வீதம் அதிகரித்துள்ள நிலையில் அரச சேவையில் உள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படுவதன் ஊடாக ஓரளவு அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்
எனவே கிழக்கின் 4784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே முகாமைத்துவ திணைக்களம் அனுமதியளித்துள்ள நிலையில் இதற்கான அனுமதியையும் விரைவில் அளிப்பதன் ஊடாக கிழக்கின் அரச சேவையை வலுப்படுத்தி தொழில்வாய்ப்புக்களை வழங்குமுடியும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்ததுடன் வெற்றிடங்கள் தொடர்பான ஆவணங்களையும் கையளித்தார்.