அகமட் எஸ்.முகைடீன்,ஹாசிப் யாசீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம். எம்.ஹரீசின் ஏற்பாட்டில் மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள் அபிவிருத்தி பணிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வுகள் மிக கோலாகலமாக வெள்ளிக்கிழமை (31) காலை முதல் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கலந்து கொண்டு அபிவிருத்திப் பணிகளை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களான இஸ்லாமபாத் சனசமூக சிகிச்சை நிலையம், பெரிய நீலாவணை சனசமூக சிகிச்சை நிலையம், சேனைக்குடியிருப்பு சனசமூக சிகிச்சை நிலையம், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம் என்பன காலைவேளையில் திறந்து வைக்கப்பட்ட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.