நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டமும் மேதினப்பேரணியும் இம்முறை தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம் பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம் பெறவுள்ள மேதினக்கூட்டத்தில் சங்கத்தின் முக்கியஸ்தர்களும் நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, மொனராகலை, கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.
இந்த மேதினக்கூட்டம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள் ,பணிமனை உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று 01.04.2017 அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் அட்டன் இந்திரா மண்டபத்தில் இடம் பெற்றது.