மருதமுனை தாருல் ஹுதா கல்லூரியின் பட்டமளிப்பு விழாவும் கட்டிடம் திறப்பும்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரிக்கான கட்டங்கள் திறந்து வைத்தலும், மாணவிகளுக்கான பட்டமளிப்பும், காலையும், மாலையும் இரு அமர்வுகளாக இன்று (01-04-2017) கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது. காலை அமர்வு கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தலைமையில் நடைபெறுகின்றது.

காலை அமர்வில் கட்டங்கள் திறந்து வைக்கப்படவுள்ளது இதில் பிரதம அதிதியாக சஊதி அரேபியாவைச் சேர்ந்த மஆலிஷ் ஷேய்க் கலாநிதி அப்துல் அஸீஸ் ஹுமைய்யின் அல்-ஹுமைய்யின் அவர்கள் கலந்து கொள்கின்றார்கள். கௌரவ அதிதியாக பறகஹதெனியா ஜம்இய்த்து அன்சாரி சுன்னத்தில்; முஹம்மதிய்யாவின் கௌரவத் தலைவர் அஷ்ஷெய்க்; அபூபக்கர் சித்தீக் மதனி அவர்களும், சிறப்பு அதிதியாக கௌரவச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் எம்.ஏ அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

மாலை அமர்வு கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.இந்த அமர்வில் 112 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படவுள்ளது.இதில் பிரதம அதிதியாக இந்தியாவைச் சேர்ந்த பேரசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொள்கின்றார்.மேலும்; கௌரவ அதிதியாக பேராசிரியர் டாக்டர் சித்தீக் அவர்களும் தென்கிழக்குப் பல்கலைக் கழக அரபு இஸ்லாமிய கற்கைகள் பீடாதிபதி அஷ்ஷெய்க் மஸாஹிர் அவர்களும் கலந்து கொள்கின்றனர். 

மேலும் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி, கல்லூரி நிருவாகிகள் மற்றும் கல்விமான்கள், விரிவுரையாளர்கள் வர்த்தகர்கள், நலன்விரும்பிகள், ஊர்பிரமுகர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொள்கின்றனர். 

மருதமுனை தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி மருதமுனைப் பிரதேசத்திலே பெண்களுக்கான அரபு இஸ்லாமிய கற்கைகள் கல்லுரி ஒன்று இல்லாத நிலையில் பெண்பிள்ளைகள் வெளியிடங்களுக்குச் சென்று பல கஷ்;டங்களுக்கு மத்தியில் அதிக பணம் செலவு செய்து கற்கவேண்டிய ஒரு நிலை இருந்து வந்தது.இந்த நிலையை மாற்றியமைக்க யாரும் முன்வரவில்லை இருந்த போதிலும் தற்கால நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அல்-குர்ஆர், அல்-ஹதீஸ் அடிப்படையில் பெண்களை உள்வாங்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.அதன் அடிப்படையில்தான் 'மருதமுனை தாருல் ஹூதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது.

இவ்வாறான இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறையும்,ஆர்வமும் காட்டியவர் வை.எல்.எம்.அன்ஸார் என்பது வரலாற்றில் பதியப்படவேண்டிய ஒன்றாகும்.அவரின் தூடுதலின் அடிப்படையிலேயே இந்த விடையத்தை அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் சலபி,மதனி அவர்கள்; கவனத்தில் எடுத்தார்.அதன் அடிப்படையில் அவரது இல்லத்தில் 2008.02.03ஆம் திகதி இஷாத் தொழுகையின் பின் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் சலபி,மதனி மற்றும்; கொள்கை அடிப்படையில் நெருக்கமான சகோதரர்களை ஒன்றுகூட்டியிருந்தார்.

இந்த ஒன்று கூடலிலே மருதமுனை பிரதேசத்தில் 'ஆழமான இஸ்லாமிய அறிவும், ஆன்மீகப் பண்புகளும் கொண்ட அல்குர்ஆன் சுன்னா வழி நடக்கும் சிந்தனையாளர்கள்,சமூக வழிகாட்டிகள்,சமூக ஆய்வாளர்களாக பெண் தாஇய்யாக்களை உருவாக்குதல்' என்பதன் அவசியத்தை வலியுறுத்தி விளக்கினார். இக்கருத்தினை அங்கு வந்திருந்தவர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்;.இதன் அடிப்படையில் மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை, பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கத்தினர், புத்திஜீவிகள் என பலதரப்பினரதும் ஒப்புதலையும் பெற்றுக்கொண்டு செயற்பட்டதன் விளைவாக உருவாக்கப்பட்டதே 'தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி' ஆகும்.

இக்கல்லூரியின் ஆரம்ப நிருவாகம் 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் அஷ்ஷெய்க் கலாநிதி முபாரக் மதனி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கொள்கைச் சகோதரர்கள் மத்தியிலிருந்து பின்வருவோர் நிருவாகிகளாக தெரிவுசெய்யப்பட்டனர். 

தலைவர் :- டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ், உபதலைவர் :-சட்டத்தரணி எம்.எல்.துல்கர் நயீம்(துல்சான்).செயலாளர் :-ஆசிரியர் எம்.பஹுறுத்தீன்,உப செயலாளர்கள்:-ஆசிரியர் ஏ.எச்.நஸ்றுத்தீன்,சமூர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.நவாஸ்,பொருளாளர்:- வர்த்தகர் எம்.எம்.உதுமாலெப்பை உறுப்பினர்கள்:-ஓய்வுபெற்ற ஆசிரியர் ஐ.எம்.இப்றாஹீம், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ.எல்.செயினுலாப்தீன்,ஓய்வுபெற்ற சதொச முகாமையாளர் எம்.ஏ.எம்.மர்சூக்;,வர்த்தகர் ஐ.எல்.எம்.மிஹ்லார் சமூகசேவையாளர் வை.எல்.எம்.அன்சார், யூ.எல்.இஸ்மாலெப்பை, ஏ.எல்.கே.ஏ.ஹாதி, கல்லூரியின் அதிபராகவும், நிருவாக சபை உறுப்பினராகவும் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி ஆகியோருடன் ஏ.சி.பதுறுத்தீன்,எஸ்.எல்.எம்.நிஸார,;ஐ.எல்.எம். பாறூக்.எம்.அப்துல் வதூத் ஆகியோரும் உள்வாங்கப்பட்டனர்.

அமைவிடம்: 'தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி' இலங்கையில் தென்கிழக்கிலுள்ள மருதமுனை; நகரின்; பிரதான வீதியில் அமைந்துள்ளது.மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள இக்கல்லுரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் அவர்களின் வீட்டில் தற்காலிகமாக 2008.05.02ஆம் திகதி முதல் 20 மாணவிகளுடன் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்று முதல் கல்லூரியை நிரந்தரமாக அமைப்பதற்கான இடத்தை தேடும் முயற்சியில் நிர்வாகம் முழுமூச்சுடன் செயற்பட்டது. இதன் விளைவாக அப்போது கல்முனை பிரதேச செயலாளராக இருந்த சகோதரர் எம்.எம்.நௌபல் அவர்களினால் மருதமுனை 65மீட்டர் வீட்டுத்திட்டத்தின் அருகாமையில் உள்ள அரச காணியிலிருந்து 1ஃ2 ஏக்கர் காணி 2008.06.22ஆம் திகதி ஒதுக்கித்தரப்பட்டது. இக்காணியில் 2008.06.25ஆம் திகதி தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் பெயர்ப்பலகை நடப்பட்டது.

இக்காணியில் கல்லூரி அமைப்பது தொடர்பாக நிரு;வாகசபை கலந்துரையாடியபோது இக்காணியை நிரப்புவதற்கு ஏற்படும் பெரும் செலவீனம், மாணவர்களின் பயணத்தூரம், பாதுகாப்புச்சூழல் போன்ற பல்வேறு காரணங்களினால் தற்போதைக்கு வேறு இடத்தை தேர்ந்தெடுப்பதுதான் பொருத்தம் எனக்கருதி மிகவும் பொருத்தமான இடத்தைத் தேடும் பணி தொடர்ந்தது.இந்நிலையில் கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றி வரும் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் அவர்களின் துணைவியார் முகம்மட் இஸ்மாயில் முனவ்வரா அவர்களும் அவரது சகோதரி டொக்டர் சித்தீக் அவர்களின் துணைவியார் மவ்லவியா முகம்மட் இஸ்மாயில் நூறுல் ஐன் அவர்களும் ஒன்றிணைந்து அவர்களுக்குச் சொந்தமான காணியை அல்லாஹ்வுக்காக மனமுவந்து 2012.05.11ஆம் திகதி வக்பு செய்தனர்.

(இவர்கள் மருதமுனையின் பிரபல வர்தகர் சீப் பலஸ் ஹாஜியாரின் புதல்விகள் என்பது குறிப்பிடத்தக்கது.) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரக்கும் அல்லாஹ் நிறைவான கூலியைக் கொடுப்பானாக! இப்பொழுது இவ்விடத்திலேயே இப்பிரமாண்டமான கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் பறகஹதெனியாவில் உள்ள ஜம்இய்த்து அன்சாரி சுன்னத்துல் முஹம்மதிய்யா அமைப்பின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மதிப்புக்குரிய மஆலிஷ் ஷேய்க் கலாநிதி அப்துல் அஸீஸ் ஹுமைய்யின் அல் ஹுமைய்யின் அவர்களது முயற்சியினால் 3 கோடி 40 இலட்சம் ரூபாவிற்கு கல்லூரியின் அருகாமையில் உள்ள காணியும் 2015.08.08ஆம் திகதி கொள்வனவு செய்யப்பட்டது.

நிதி ஈட்டம்:  நிரந்தர வருமான வழிகள் ஏதுமில்லாத நிலையில் இயங்கி வரும் கல்லூரிக்கு மருதமுனை மக்கள் குறிப்பாகவும் ஏனைய மக்கள் பொதுவாகவும் ஆரம்பம் முதல் நிதி உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் மாணவிகளிடம் இருந்து வருடந்தோறும் புதிய மாணவிகளுக்கான அனுமதிக கட்டணமும், மாதாந்த கட்டணமும் பெறப்படுகின்றன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்து சகோதரர்கள் சிலர் கல்லூரியில் கல்வி பயிலும் மாதக்கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவிகள் சிலருக்கு அக்கட்டணத்தைச் செலுத்துவதற்கு நிதிஉதவி செய்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்று பறகஹதெனிய ஜம்இய்யத்து அன்சாரிஸ் சுன்னத்துல் முஹம்மதிய்யா, கொழும்பு ஜம்இய்யத்துஸ் ஷபாப், ஜம்இய்யத்துல் ஹிக்மா மற்றும் அல்கிம்மா பொன்ற நிறுவனங்கள் நிதி மற்றும் பொருள் உதவிகளையும் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பௌதீகவள அபிவிருத்தி: 2008.05.02ஆம் திகதி முதல் தற்காலிக கட்டத்தில் முதலாவது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வகுப்புக்குத் தேவையான தளபாடங்கள், காரியாலய உபகரணங்கள் , வாசிகசாலைக்குத் தேவையான தளபாடங்கள் போன்றவற்றை நிருவாக சபை உறுப்பினர்களும் மருதமுனையைச் சேர்ந்த தனவந்தர்கள் சிலரும் வழங்கி வைத்தனர்.மேலும் உள்ளுர் மற்றும் வெளியூர் தனவந்தர்கள், அரசியல்வாதிகள், சமூக நிறுவனங்களின் பொறுப்பாளார்கள் பலரும் கணணிகள், போட்டோப் பிரதி இயந்திரங்கள், தையல் மெசின்கள், ஜெனரேட்டர், புரஜெக்டர் போன்றவற்றை கல்லூரிக்கு வழங்கினர். 

2012.05.14ஆம் திகதி கல்லூரிக்கு வக்பு செய்யப்பட்ட காணியில் தற்காலிகமாக வகுப்பறைக் கட்டடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்குரிய செலவினங்களை ஈடு செய்யும் பொறுப்பினை நிருவாகிகளும்;,பொதுச் சபை உறுப்பினர்களும், பெற்றோர்களும்,நலன்விரும்பிகளும்;; வழங்கினார்கள்; சுமார் 22 இலட்சம் ரூபா செலவில் இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் 2012.07.13ஆம் திகதியில் இருந்து இயங்கத் தொடங்கியது. இதில் இரு வகுப்புக்பறைகளும், பிரதி அதிபர் காரியாலயமும் இயங்கியது அவ்வப்போது கூட்ட மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டது.

அதிகரித்து வந்த மாணவர்களின் தொகைக்கேற்ப வகுப்பறைத் தேவைகளும் விரிவுபடுத்தப்பட வேண்டியிருந்ததனால் மேலும் ஒரு தற்காலிக கட்டடத்தை அமைப்பதற்கு நிருவாகத் தீர்மானத்தின் படி வர்த்தகரும் பொறியிலாளருமான சகோதரர் எம்.எம்.சபீக் ஹாஜியார் அவர்களின் காணியில் அவரது அனுமதியுடன் சுமார் 8 இலட்சம் ரூபா செலவில் 2013.05.02ஆம் திகதி கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்கான செலவீனங்களை ஈடு செய்வதற்கும் நிருவாகிகள், பொதுச்சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலதரப்பினரும் உவினார்கள் இக்கட்டடத்தில் இரு வகுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது.

பள்ளிவாசலும் வாசிகசாலையும் :-

2013.11.15ஆம் திகதி கல்லூரியின் பள்ளிவாசலுக்கான அடிக்கல் நடப்பட்டது. இதில் பறகஹதெனியா ஜம்இய்த்து அன்சாரி சுன்னத்தில்; முஹம்மதிய்யாவின் கௌரவத் தலைவர் அஷ்ஷெய்க்; அபூபக்கர் சித்தீக் மதனி அவர்களும் கௌரவச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் மற்றும் கல்லூரியின் தiலைவர், கல்லூரியின் பணிப்பாளர், செயலாளர், பொருளாளர் உட்பட நிருவாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். சுமார் 1 கோடி ரூபா செலவில் மூன்று மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கட்டிடத்திற்குத் தேவையான நிதியினை சஊதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் அஷ்ஷேக் அஹ்மத் அப்துல்லாஹ் அர்ரஷீத் அவர்கள் வழங்கியிருந்தார்

.2015.03.07ஆம் திகதி இப்பள்ளிவாசல் இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மஆலிஷ் ஷேய்க் கலாநிதி அப்துல் அஸீஸ் ஹுமைய்யின் அல் ஹுமைய்யின அவர்களும் அஷ்ஷெய்க் அபூபக்ர் சித்தீக் மதனி அவர்களும் சகோ.கலீலுர் ரஹ்மான் எம்.ஏ.அவர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.இக்கட்டடத்தின்; முதலாவது மாடி வாசிகசாலையுடன் தற்காலிக கணனி கூடமாகவும், இரண்டாவது மாடி வகுப்பறையாகவும், கீழ்த்தளம் மஸ்ஜிதாகவும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றது.; 

புதிய கட்டடம்:

பறகஹதெனிய ஜம்இய்யத்து அன்சாரிஸ் சுன்னத்தில்; முஹம்மதிய்யாவிடம் நிர்வாகம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இன்று திறந்து வைக்கப்படுகின்ற புதிய கட்டிடத்pற்கான அடிக்கல் 07.03.2015 அன்று நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் மஆலிஷ் ஷேய்க் கலாநிதி அப்துல் அஸீஸ் ஹுமைய்யின் அல் ஹுமைய்யின் அவர்களும் ஜம்இய்த்து அன்சாரிஸ் சுன்னத்தில்; முஹம்மதிய்யாவின் கௌரவத் தலைவர் அஷ்அஷய்க் அபூபக்ர் சித்தீக் மதனி அவர்களும் கௌரவச் செயலாளர் சகோ. கலீலுர் ரஹ்மான் ஆ.யு அவர்களும் கல்லூரியின் தiலைவர், கல்லூரியின் பணிப்பாளர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்கட்டிடத்தின் கிழக்குப் புறத்தின் முன்பகுதி நிர்வாக அலுவலகங்களையும் பின்பகுதி மாணவர்களின் வகுப்பறைகளையும் மேற்பகுதி வகுப்பறை, கணனிகூடம் ஆகியவற்றையும் கொண்டு காணப்படுகின்றது. மேற்குப் புறப்பகுதியின் கீழ்த்தளமானது விடுதிமாணவர்களின்; உணவறையாகவும் சமையலறையாகவும் அமையப் பெற இரண்டாவது மாடியானது மாணவர் தங்கும் விடுதியாகவும் அமையப்பெற்றுள்ளது. 

இந்நிலையில் அமையப்பெற்ற இக்கட்டிடத்தின் மூன்றாவது மாடி நிர்வாகத்தின் மஷூறாவின் அடிப்படையில் தேவைகருதி அனுசரனையாளர்களின் அனுமதியுடன் கூட்ட மண்டபமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இக்கல்லூரியின் நோக்கக் கூற்று:

அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ வழியில் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் தஃவா, கல்வி மற்றும் தர்பிய்யாவில் சிறந்து விளங்கும் பெண்களை உருவாக்குவதற்கான கல்வி நிறுவனம்.

இக்கல்லூரியின் பணிக்கூற்று:

இஸ்லாமியக் கற்கைகளையும் அரபு மொழியையும் கற்கவும், ஆளுமைப் பண்புகளையும் வழிகாட்டும் திறன்களையும் வளர்க்கவும் ஆர்வம் கொண்ட மாணவிகளுக்கு சிறந்த கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்குதல்.

தற்போதைய நிருவாக சபை :

தலைவர் :- டாக்டர்.ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாரக் ஸலபி, மதனி, 
உபதலைவர்:-  அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏ.எஸ்.எம். முபாறக் பாரீ, 
செயலாளர்:- எம்..பஹுறுத்தீன் ஆசிரியர், 
உபசெயலாளர்:- ஏ.எச் நஸ்றுத்தீன் ஆசிரியர), 
பொருளாளர்:- எச்.ஏ.எல்.ஏ.எம்.ஜவ்பர் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர்,

உறுப்பினர்கள்:- ஏ.எல்.செயினுலாப்தீன் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஏ.எல்.கே.ஏ.ஹாதி எலக்டரீசியன் அஷ்ஷெய்க் எஸ்.எச்.முஜீப் ஸலபி, ஏ.எஸ்.எம். முஜீப் ஆசிரியர், யூ.எல். இஸ்மாலெப்பை, அஷ்ஷெய்க் ஆர்.நுவீஸ் ஸலபி, மக்கி; அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜிபான் ஸஹ்வி, மதனி, அஷ்ஷெய்க் ஏ.ஆர்.சிபான் ஸஹ்வி, மதனி, எம்.சி.எம்.முஸம்மில், எம்.எம்.எம்..கபீன் பொறியிலாளர். ஏ.எச்.எம்.முஜாஹித் பொறியிலாளர், எச்.எல்.எம். றாபி சிவில் பொறியிலாளர் ஜெஸ்மி எம். மூஸா ஆசிரியர், அஷ்ஷெய்க் யூ.எல்.ஸஜீத் ஸலபி,எம்.ஏ.அஷ்ரப் மின் பொறியிலாளர்.

வாசிகசாலை 

அரபு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பெறுமதியான நூல்களைக் கொண்ட ஒரு சிறந்த வாசிகசாலை கல்லூரியில் அமையப் பெற்றுள்ளது. 

கணனிக் கூடம் 

மாணவிகளின் கணனி அறிவை விருத்தி செய்யும் நோக்கில் சுமார் 30 கணணிகளைக் கொண்ட சகல வசதிகளுடனும்கூடிய ஒரு கணணிக் கல்லூயில் உள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.

விரிவுரையாளர்கள்

எமது கல்லூரியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விரிவுரையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னா வழி நடக்கும் தாயிகளாக இருக்க வேண்டும் என்பது பொது விதியாகும். மேலும் இவர்கள் பட்டப்படிப்புடையவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கிணங்க நமது பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே எமது கல்லூரியின் விரிவுரையாளர்களாவார்கள். இவர்களில் சிலர் பகுதி நேர விரிவுரையாளர்களாகவும் முழு நேர விரிவுரையாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

மேலும் கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவிகளில் முதல்நிலைப் பெறுபேறுகளைப் பெறும் சிலர் பல்கலைக் கழகம் செல்லும் வரை தற்காலிக விரிவுரையாளர்களாகக் கடமையாற்றுவர். சிலர் கல்லூரியில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றி விட்டு தற்போது பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், மேற்படிப்பைத் தொடர்பவர்களாகவும் வேறு சில கல்லூரிகளிலும் நிறுவனங்களிலும் பணியாற்றியும் வருகின்றனர்.

மாணவர் அனுமதி

வருடந்தோரும் ழுஃடு பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருவாரங்களின் பின்னர் விண்ணப்பதாரிகள் எழுத்துப் பரீட்சைக்கும் நேர்முகப் பரீட்சைக்கும் அழைக்கப்படுவார்கள். அவற்றில் சித்திபெறுகின்றவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள். 

அடிப்படைத் தகைமைகள்: 

விண்ணப்பதாரிகள் ழுஃடு பரீட்சையில் தமிழ் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும். இவற்றில் தமிழ் மொழி உட்பட 3 திறமைச் சித்திகள் பெற்றிருக்க வேண்டும். குர்ஆன் ஓதத் தெரிந்திருக்க வேண்டும். 

கற்கை நெறிக் காலமும் பாடங்களும் 

கல்லூரியின் கற்கைக் காலம் : நான்கு வருடங்களாகும். இக்காலத்தில் அல் குர்ஆன், ஹதீஸ் கலை, அகீதா, இஸ்லாமிய சட்டக்கலை, இஸ்லாமிய வரலாறு, அரபுமொழிஇ ஆங்கிலமொழி, தகவல் தொழில் நுட்பம,; சிங்களம,; மனையியல்,புஊநு யுஃடு கலைப்பிரிவு பாடங்கள் போன்றவை போதிக்கப்படுகின்றன. 

புறப்பாடவிதான செயற்பாடுகள்

மாணவர்களின் ஆளுமை பண்புகளை விருத்தி செய்யும் நோக்கில் மாதம் இருமுறை மாணவர் மன்றம் நடாத்தப்படுகின்றது.

தேடல் திறனையும் அறிவு வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக போட்டிகளும் தர்பியாக்களும் நடாத்தப்படுகின்றன.

மாணவர்களின் பேச்சாற்றலை வளர்ப்பதற்காக காலை கூட்டமும் விஷேட பயான்களும் கல்லூரிக்குள்ளும் வெளி இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

றமழான் மாத காலத்தில் வானொலி நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்கு கொள்ள செய்யப்படுகின்றனர். இவை தவிர அவ்வப்போது அகில இலங்கை ரீதியாக நடைபெறுகின்ற இஸ்லாமிய போட்டிகளிலும் பங்கு கொள்ளச் செய்கின்றனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற அரபு மொழி தேசிய ரீதியலான பேச்சுப் போட்டியில் நமது கல்லூரி மாணவி அப்துல் ஹாதி தானியா முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

2016ஆம் ஆண்டு கொழும்பு மனாருத் தஃவா அமைப்பினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியலான இஸ்லாமிய வினா விடை போட்டியில் எம்.ருஷ்தா எனும் மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் தவிர இன்னுப் பலர் இப்போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளனர்.

அல்லாஹ்வின் பேரருளால் தாருல் ஹுதா முஸ்லிம் உம்மாவிற்குக் கிடைத்திருக்கும் ஒரு சொத்தாகும். இது வரை (2016) ஐந்து குழுக்களைச் சேர்ந்த 112 மாணவிகள் தமது கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்து இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழியில் உயர் டிப்ளோமா சான்றிதழைப் பெறுகின்றனர். இவர்களில் 90 பேர் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

பட்டம் பெறும் மாணவிகள்-

2012ஆம் ஆண்டு 17 பேர். 

எம்.எஸ்.பாத்திமா இன்ஸாப்(மும்தாஸ்), ஏ.எச்.தானியா(மும்தாஸ்) யூ.பர்ஜீஸ் (மும்தாஸ்), எம்.கே.மஹ்ஜபீன் மும்தாஸ்), ஆர்.ஜூதாமா (மும்தாஸ்), எம்.எம்.ஆயிஷா திஹானி (மும்தாஸ்), எம்.பீ.ஸப்ரீன் (மும்தாஸ்), எம்.எஸ்.அப்ஸானா (ஜெய்யித் ஜித்தன்), எம்.எல்.கே.பஸ்லியா(ஜெய்யித்), ஜே.எம்.எம்.ஜௌஸன் (ஜெய்யித்), எம்.எஸ்.எப்.ஸதீனா (மக்பூல்), என்.எம்.லுப்னா (மக்பூல்), எம்.ஆர்.கிப்தியா(மக்பூல்), கே.எல்.எப்.வஸ்மியா (மக்பூல்), எஸ்.றிஸ்னா (மக்பூல்), ஏ.எப்.எப்.றொஷான் (மக்பூல்), ஏ.எல்.பஸ்மியா(மக்பூல்), 

2013ஆம் ஆண்டு 16 பேர்.

ரீ.எல்.எப்.நதீபா (மும்தாஸ்), என்.ஏ.பாத்திமா ஷிபானி (மும்தாஸ்), கே.எல்.எப்.ரஜானா (மும்தாஸ்), ஐ.எப்.ஹஸ்னா (ஜெய்யித் ஜித்தன்), எம்.எம்.அதிய்யா (ஜெய்யித்), எம்.எம்.யமுனா (ஜெய்யித்), எம்.கே.மஸ்பா (ஜெய்யித்), ஏ.எச்.ஸஹ்னா (ஜெய்யித்), எம்.எம்.பஸ்னா (ஜெய்யித்), எஸ்.பாத்திமா ஸஜீனா(ஜெய்யித்), ஏ.அப்ரோஸ் (ஜெய்யித்), ஏ.அப்றா (மக்பூல்;), எல்.எப்.ஜெஸ்லி (மக்பூல்;), எம்.ரீ.ஜெஸ்னா பானு (மக்பூல்;), ஆர்.சப்னம் (மக்பூல்;), எம்.எப்.பாயிஸா(மக்பூல்;). 

2014ஆம் ஆண்டு 15 பேர்.

எம்.எப்.எப்.நிக்தி(மும்தாஸ்),ஏ.எப்.ரதீனா(மும்தாஸ்),ஏ.எச்.தஸ்னீமா(மும்தாஸ்),எம்.ஜே.எப்.ரிஸ்மினா (மும்தாஸ்) யூ.ஜம்ஸித் ஜஹான் (மும்தாஸ்)என்.எம்.ஜே.எப்.ஜூஹி (ஜெய்யித் ஜித்தன்), எஸ்.எப்.அஷ்ரா (ஜெய்யித்), எஸ்.ஏ.எஸ்.எப்.ஷிபா(ஜெய்யித்), பி.எப்.நுஸ்ஹா (ஜெய்யித்), எம்.என்.எப்.நிப்னா (ஜெய்யித்), ஏ.எப்.ஜலூதா(ஜேய்யித்), எம்.பி;.ஸஹ்னாஸ் பேஹம் (மக்பூல்), எஸ்.றக்ஷானா பேஹம் (மக்பூல்), எஸ்.ஐ.எம்.எப்.சப்னா(மக்பூல்), எம்.ஜே. சஞ்சீதா (மக்பூல்). 

2015ஆம் ஆண்டு 22 பேர்.

ஏ.எஸ். அப்றோஸ் (மும்தாஸ்), ஜே.எப். சனா (மும்தாஸ்),ஏ.ஆர்.எப். சுஜா(மும்தாஸ்),எம்.ஏ.ஆர்.எப். மௌபிகா(மும்தாஸ்) எம்.ஜே.எப். சஜீனா(மும்தாஸ்) எம்.எஸ்.எப். யமானா(மும்தாஸ்) எம்.ஏ. பேபி ஷஹீலா(மும்தாஸ்) எம்.ஜே.எப். சப்னா(மும்தாஸ்) எம்.என். றிப்கானா(மும்தாஸ்) .என்.எப். ஸீனத் (ஜெய்யித் ஜித்தன்)எம்.எப்.எப். ஸஜீயா(ஜெய்யித் ஜித்தன்)எம்.ஏ.எப். றிஜா(ஜெய்யித்) ஐ.எப். சனா(ஜெய்யித்) என்.ஏ.எப். அப்றின் (ஜெய்யித்) ஐ.எப். அஸ்ரீனா(ஜெய்யித்) வை. ஹஸ்னியா(ஜெய்யித்) எம்.டபிள்யூ.எப். ஸுஹைனா அன்வரி(ஜெய்யித்) எம்.என்.எப். றிப்னா(ஜெய்யித்) ஏ.எச். ஹப்ரீனா(ஜெய்யித்) எம்.பீ. அனீஸா(ஜெய்யித்) எம்.என். றம்ஸாத்(மக்பூல்)ஏ.ஆர். நிப்லா(மக்பூல்). 

2016ஆம் ஆண்டு 42 பேர்.

எம்.எஸ். அப்றின் ஸஹ்னா (மும்தாஸ்), எம்.எஸ். பாத்திமா பர்ஹா (மும்தாஸ்), ஆர்.எப். பர்தீபா (மும்தாஸ்), எம்.ஏ. நுஹா (மும்தாஸ்), ஏ.எச். சஹ்னா ஸிரீன் (மும்தாஸ்), ஏ.எச்.எப். ஸஜீனா(மும்தாஸ்), எம்.என். சப்னா (மும்தாஸ்), எஸ். பாத்திமா ஹுஸ்னா(மும்தாஸ்), சீ.என். சஸீனா பானு(மும்தாஸ்), எம்.ஜே. அனீகா (மும்தாஸ்), எம்.எம்.எப். றிஸ்தா (மும்தாஸ்), ஜே. பாத்திமா பஸ்னா 

எம்.ஆர். இஸ்ரத் அப்ஸானா(ஜெய்யித் ஜித்தன்),ஆர்.எப்.எம். சுஹா(ஜெய்யித் ஜித்தன்),ஏ.ஆர். ஸஹானா(ஜெய்யித் ஜித்தன்),எம்;.எப். அஹானா(ஜெய்யித் ஜித்தன்),எம்.எம். உஷாமா(ஜெய்யித் ஜித்தன்),எம்.என். சறோத் ஜஹான் (ஜெய்யித் ஜித்தன்), எம்.ஆர். றஹ்னா(ஜெய்யித் ஜித்தன்), ஏ.பீ. நிஜா (ஜெய்யித் ஜித்தன்), ஐ. ஹஸீனா (ஜெய்யித் ஜித்தன்), எம்.கே. இல்முனா(ஜெய்யித் ஜித்தன்), எம்.ஆர். பாத்திமா அஹானா(ஜெய்யித் ஜித்தன்) ஏ.எஸ்.எப். சஹீனா(ஜெய்யித் ஜித்தன்) எம். சிஹ்னா (ஜெய்யித் ஜித்தன்) எம்;.ஐ. சீபா (ஜெய்யித் ஜித்தன்) 

என்.எப். றிஜா(ஜெய்யித்), ரீ.எப். முனா (ஜெய்யித்), எம்.எம். பாத்திமா ஷரா (ஜெய்யித்), எஸ். பாத்திமா ஸஹ்ரா (ஜெய்யித்), ஏ.ஏ. அப்னா பானு (ஜெய்யித்), எம்.எச். அக்மா (ஜெய்யித்), எம்.எச். பாத்திமா சீபா (ஜெய்யித்), ஐ. பாத்திமா அப்னா (ஜெய்யித்),எம்.எச். பாத்திமா றிப்னா (ஜெய்யித்). ஏ.என். சஹ்னாஸ் சதா (மக்பூல்), எம்.எப். சாஹின் கௌஸர் (மக்பூல்), எம்.ஏ.எப். இனாபா (மக்பூல்), எம்.எஸ். றுஸ்தா பானு (மக்பூல்), எம்.ஏ. உம்மு ஸப்னம் (மக்பூல்), எம்.எச். பாத்திமா சஜ்னா (மக்பூல்),என்.எப்.சுஹானா(மக்பூல்). 

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளை அங்கீகரிப்பானாக!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -