எம்.ஜே.எம்.சஜீத்-
தாய்லாந்தில் இடம்பெற்ற 22வது தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் பங்குபற்றி சாதனை புரிந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய வீரர் மற்றும் உதைப்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய மாணி வாசிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஏ.எல் நாசர் தலைமையில் (01) அக்கரைப்பற்று ரீ.எப்.சி. மண்டபத்தில் நடைபெற்றது.
தாய்லாந்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்ற யூ.எல். செய்யட் முகம்மட் தசிய மட்டம் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அணி சார்பாக கலந்துகொண்ட அக்கரைப்பற்று பிராந்திய மாணி வாசிப்பாளர்களைக் கொண்ட வீரர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் எஸ்.ஏ.றசீன் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக உதவிப் பொது முகாமையாளர் எம்.ஐ.எம்.நசீல் மற்றும் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.எம்.கரீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.