இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதாகவும், இல்லாவிடின் இன்னும் இரண்டு வெசாக் போயாக்கள் தான் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட் காலம் வேகமாக ஓடுவதாகவும், இந்த வெசாக் போயாக்குள் முடியாது போனால், அதனையடுத்து இன்னும் ஒரு போயா மாத்திரமே உள்ளது எனவும் மஹிந்த கூறினார்.
பொதுக் கூட்டமொன்றில் இன்று கூறிய அதே கருத்தை நேற்று ஊடகவியலாளர்களிடமும் குறிப்பிட்டிருந்தார் என்பது கூறத்தக்கது.