தூய அரசியலை ஊக்குவிக்கும் M12 மக்கள் இயக்கத்தின் பேரணியும் பேராளர் மாநாடும்.!

நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதுடன், வாக்காளர்களை வாக்களிப்பில் ஆர்வமுள்ள – பங்கேற்புடையவர்களாக மாற்றுதல் என்ற நோக்கத்தோடு மார்ச் 12 மக்கள் இயக்கமானது கடந்த 13ம் திகதி முதல் கொழும்பில் தேசிய மட்ட பேரணியை ஆரம்பித்து நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இம்முன்னெடுப்பை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்திற்கான மார்ச்12 மக்கள் இயக்கப் பேரணியானது 25.03.2017ம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பெரியநீலாவனையிலிருந்து ஆரம்பித்து கல்முனை, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஊடாகச் சென்று இறக்காமம் வழியாக அம்பாறை கச்சேரியை சென்றடைந்தது.

அத்துடன் மாலை 02.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் அம்பாறை கச்சேரி விக்கிரமசிங்க கேட்போர்கூடத்தில் பேராளர் மாநாடு அம்பாறை மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்கள், வங்கிகள், இதர தொழில்சங்கங்கள், அனைத்து சமய அமைப்புக்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் காலம் அரசியலில் புதிய மாற்றத்துடன் நல்லாட்சிமிக்க நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாமே உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளோடு மார்ச் 12 மக்கள் இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான பேராளர் மாநாடு 

1. குற்றவாளியற்ற 

2. இலஞ்ச ஊழிலில் ஈடுபடாத

3. சமூகத்திற்கு ஒவ்வாத வியாபாரங்களில் ஈடுபடாத

4. சுற்றாடலைப் பேணுகின்ற 

5. அதிகாரத்தை பிழையாக பயன்படுத்தாத

6. ஊழல் நிறைந்த நிதி உடன்படிக்கையில் ஈடுபடாத

7. வாக்காளரால் இலகுவாக அணுகக்கூடிய

8. போதுமான பெண்கள் இளையோர் பிரதிநிதித்துவத்திற்காக மற்றும் சமய சமூக அமைப்புக்களின் ஒழுக்க விழுமியங்களை மதிக்க கூடிய தலைமைத்துவங்களை உருவாக்குதல். என்ற மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த ஒன்றிணைவோம் என்ற அடிப்படையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -