இஸ்லாமிய அறிஞர்களுக்கு விசா வழங்குவதில் கடினப் போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது

ஞானசாரர் போன்ற இனவாத தேரர்களின் கோரிக்கைகளுக்கு இவ்வரசு செவிசாய்த்து இஸ்லாமிய மார்க்கபோதகர்கள் மற்றும் இஸ்லாமிய அழைப்பு பணியாளர்களுக்கு விசா வழங்குவதில் கடின போக்கை கடைபிடிப்பதை தான் வன்மையாக கண்டிப்பதாக பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நபுஹான் குறிப்பிட்டார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..

இன்று ஞானசாரர் போன்ற இனவாத தேரர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.அன்று மஹிந்த அரசாங்கத்தில் இருந்த சம்பிக்க போன்ற இனவாதிகள் அன்று செய்த அதே வேலைகளை நிதானமாகவும் சுதந்திரமாகவும் செய்துவதுகின்றனர்.

அண்மையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர் ஜனாதிபதியின் விஷேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.அங்கு அவர் முஸ்லிம்கள் தொடர்பில் தெரிவித்த விசம கருத்துக்களை மௌ னமாக கேட்டுக்கொண்டிருந்த ஒட்டு மொத்த முஸ்லிம்களும் வாக்களித்த ஜனாதிபதி அவரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தொல்பொருள் முக்கியத்துவம்வாய்ந்த இடங்களை வர்தமானி மூலம் அறிவிக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து குடிவரவு திணைக்கள கட்டுப்பாட்டாளரை சந்தித்த ஞானசார தேரர் இலங்கைக்குள் சுற்றுலாவீசாவில் இஸ்லாமிய மார்க்க போதகர்கள் அழைப்பு பணியாளர்கள் வருவதாகவும் அவர்கள் அடிப்படைவாதத்தை போதிப்பதாகவும் கூறியதுடன் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டார்

ஞானசார தேரரின் கருத்துக்களை செவிசாய்த்த இந்த அரசாங்கம் இஸ்லாமிய மார்க்க போதகர்கள் மற்றும்இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளில் கடின போக்கை கடைபிடித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு நம்பி வாக்களித்த முஸ்லீம் மக்களை ஏமாற்றும் இன்னுமொரு நயவஞ்சகத்தனமான செயல் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நபுஹான் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -