அவதானம் - நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஊர்ந்து சென்று விபத்து

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று தானாக இயங்கி இஜிராபுர வீதியின் பக்கம் வேகமாக சென்று ஆசிரியை ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் 30.03.2017 காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

ஆட்டோ சாரதி ஆட்டோவின் கைத்தடையினை இழுத்து விட்டு வீதியோரத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது கைத்தடை தளர்ந்து ஆட்டோ வேகமாக பள்ளத்தை நோக்கி சென்றுள்ளது. 

அதன் போது வீதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியர் மேல் மோதி ஆட்டோ வீட்டின் கூரையொன்றின் மீது வீழ்ந்துள்ளது. இவ்விபத்தில் ஆசிரியர் காயமடைந்துள்ளதுடன் ஆட்டோ மற்றும் வீடு சிறிய அளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -