மத்திய மாகாணசபையை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும் - அமைச்சர் திகாம்பரம்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
டைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணசபையை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும் அதே வேலை மத்திய மாகாண கல்வி அமைச்சை நாமே பொருபேற்போம் என மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்

அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை கவிரவலை தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களின் நலன்கருதி கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்காக ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக 75 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தக்கட்டிடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 26 ஆம் திகதி கவிரவில பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், உதயகுமார், எம்.ராமசாமி, அம்பகமுவ பிரதேசபையின் முன்னாள் தலைவர்களான நகுலேஸ்வரன், எம்.இரவீந்திரன் , அட்டன் நகரசபையின் முன்னாள் தலைவர் அ.நந்தகுமார், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுரேஸ்குமார், ட்ரஸ்ட் நிறுவன அட்டன் இயக்குநர் அத்துலசேனாரத்த, சாமிமலை இணைப்பாளர் பாலசுந்தரம் உட்பட பாடசாலை நிருவாகத்தினரும் பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு தற்போது அரசியல் ரீதியாக செயற்படுதவதனால் எனது அமைச்சின் ஊடாக பாடசாலைக்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை சரியாக பயன் படுத்தமுடியாது தடையாக உள்ளது அத்தோடு சில பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் அரசியல் ரீதியாக செயற்படுகின்றனர் மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் பாடசாலையில் அரசியல் நடத்தை வேண்டாம். 

அரசியரை பாடசாலை தவிந்துவெளியில் வைத்துக்கொள்ளுங்கள் மத்திய மாகாண கல்வி அமைச்சு நாம் பெற்றுக்கொண்டபின் இவ்வாறான அதிபர் ஆசரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேலும் என அமைச்சினூடாக வீடமைப்பு மற்றும் பாடாசாலை அபிவிருத்தியிலும் அரசியல் பாராது அனைவருக்கும் அபிவிருத்தியை முன்னெடுத்துவருகி க்றேன் கவரவில். தமிழ் வித்தியாலயத்திகும் எனது அமை.சினூடாக 75 லட்சம் ருபா நீதியை ஒதுக்கீடு செய்துகேட்போர் கூடமொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளளேன் என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -