இலவச மின்சார இணைப்பினை வழங்க மாலைத்தீவு நிறுவனத்துடன் ஒப்பந்தம்.!

ட்டக்களப்பு மாவட்டத்தில், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இலவசமாக மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மாலைத்தீவின் Renewable energy Maldives நிறுவனத்துடன் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் இன்று திங்கட்கிழமை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாலைத்தீவின் (solar panels) நிறுவனத்தின் தலைவர் இப்ராஹீம் நஸீட் ஆகியோர் கைச்சாத்திட்டனர். 

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற பிரதேசங்களை இணங்கண்டு அங்குள்ள வீடுகளுக்கு இலசவமாக சூரிய மின்கலங்களை (solar panels) இந்த நிறுவனம் வழங்கவுள்ளது. அதில் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தி குறித்த வீட்டின் பயன்பாட்டுக்கும் வழங்கப்படவுள்ளது. அத்துடன், சூரிய மின்கலங்கள் பொறுத்தப்படும் சிறிய வீடுகளுக்கு 1500 ரூபாவும், பெரிய வீடுகளுக்கு 3ஆயிரம் ரூபாவும் மாதாந்த வாடகையும் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது. அதுமாத்திரமல்லாது, ஐந்து வருடங்களின் பின்னர் மாத வாடகையாக 5ஆயிரம் ரூபா வழங்கவும் குறித்த நிறுவனம் சம்பந்தம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், 

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு அமைiவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மக்களுக்கு பயன்மிக்க இத்திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுள்ளேன். இத்திட்டத்தின் ஊடாக இலவசமாக மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் மக்களுக்கு மேலதிக வருமானமாகவும் இது அமையும். – என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -