திருகோணமலை பொது வைத்தியசாலையில் பன்றி காய்ச்சல் என சந்தேகிக்கப்ட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை.இலிங்கநகர் பகுதியைச்சேர்ந்த எஸ்.றுக்ஸான் குறூஸ் (29வயது) எனவும் தெரியவருகின்றது.
கடந்த 19ம் திகதி அனுமதிக்கப்பட்ட இவர் காய்ச்சல்-தடிமல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர் மன்னார் பிரதேசத்திற்கு சென்று வந்த போதே காய்ச்சல் ஏற்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை பன்றி காய்ச்சல் என சந்தேகிக்கப்ட்ட நான்கு பேரில் நேற்று புதன்கிழமை புல்மோட்டை-01ம் வட்டாரத்தைச்சேர்ந்த ஏ.எஸ்.தப்ஸீரா (44வயது) என்ற பெண்ணும் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.
குறித்த இருவரினதும் இரத்த மாதிரிகளை கொழும்பிலுள்ள தொற்று நோய் ஆராய்ச்சி பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியசாலைக்கு வரும் போது மூக்குகளை மூடுகின்ற கவசங்களை அணியுமாறும் வேண்டுகொள் விடுக்கின்றனர்.