O/L பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களின் நன்மைக்காக...


பழுலுல்லாஹ் பர்ஹான்-
ம்முறை O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும்ஆண் மாணவர்களின் நன்மை கருதி காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் A/L கல்விப்பொதுத் தராதர உயர்தர கற்கையை தொடர்வதற்கான கற்கைநெறிக்கு புதிய மாணவர்கள் இவ் வருடம்சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க்ஏ.எம்.அக்றம் (நளீமி) தெரிவித்தார்.

மேற்படி கற்கைநெறி தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..................


இரண்டு வருடங்கள் ஓர் ஆன்மீக சூழலில் தங்கியிருந்து இஸ்லாமிய பெறுமானங்களைக் கொண்ட துறைசார்அறிஞர்களை உருவாக்கும் நோக்கில் அல்-மனார் நிறுவனம் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இம்முறைகலை (Arts), வர்த்தகம் (Commerce), பொறியியல் தொழிநுட்பம் ((Engineering.Technology ) ஆகிய பிரிவுகள்ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 30 மாணவர்களாக 90 மாணவர்கள் தகுதி அடிப்படையில் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


பாடசாலை நேரங்களில் வளாகத்தினுள்ளே வகுப்புக்கள் நடைபெறுவதற்கான ஏற்பாடு, மாலை நேரங்களில்நிபுணத்துவமிக்க ஆசியர்களது பிரத்தியேக வகுப்புக்கள், சுய கற்றல் செயற்பாடு, இஸ்லாமிய பண்பாட்டுப்பயிற்சி ,மேலதிகமாக அறபு,ஆங்கிலம்,தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்,அல்குர்ஆன் போன்றபாடங்களுடன் ஆண்மீக பண்பாட்டுப் பயிற்சி, சிறந்த தங்குமிடம் மற்றும் உணவு வசதி போன்ற தனிச்சிறப்பம்சங்களோடு ஆரம்பிக்கப்படவுள்ள

இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்க விரும்பும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைஎதிர்பார்த்திருக்கும் ஆண் மாணவர்கள் நேரடியாக அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் அல்லது www.almanarkz.org என்ற இணையத்தளத்தில் அல்லது 0652245797,0763938718 ஆகிய தொலைபேசிஇலக்கங்களுக்கு அழைத்து விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து 2017 மார்ச் 31ம் திகதிக்குமுன்னர் பணிப்பாளர்- அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி 13,கடற்கரை வீதி,புதிய காத்தான்குடி-என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறும், O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்வெளிவந்த பின்னர் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -