அகமட் எஸ்.முகைடீன்-
கல்முனை பிரதேசத்தில் விளையாட்டுத்துறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் பிரதேச விளையாட்டுக் கழகங்களுடன் இன்று (29) புதன்கிழமை மாலை கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம். பறகத்துல்லாஹ்இ எம்.எஸ். உமர் அலிஇ ஓய்வுபெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் விளையாட்டுத்துறை ஆலோசகருமான எம். அப்துல் நபார்இ கல்முனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம். றசின்இ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் கே.எம். தௌபீக் மற்றும் பிரதேச விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கிறிக்கெட் மற்றும் உதை பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை மேலும் வளர்ச்சியடையச் செய்வதோடு ஏனைய விளையாட்டுக்களான பெட்மின்டம்இ கரைப்பந்தாட்டம்இ கபடிஇ டேபில் டெனிஸ் போன்ற விளையாட்டுக்களையும் ஊக்குவித்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் இதன்போது விளையாட்டுக் கழகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதி அமைச்சர் கேட்டறிந்து அவற்றை நிவர்த்திப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.