மலிவு விலை பொழிகிறது
++++++++++++++++++++++
மலிவு விலை பொழிகிறது
ஏப்ரல் வர நெளிகிறது
உலாப் போகும் ஆட்கள்
விழப் போறாரே
அழப் போறாரே
பாவமே
வரும் வழியில் துணிக் கடையில்
பருவ கால விலைக் கழிவு.
டவல் எடுத்து முகம் துடைக்க
விடியும் வரை தோல் சொறியும்.
காலி வீதியில்
போலி விளம்பரம்.
காணும் போதிலே
ஆசைகள் தரும்.
வின் பண்ணினால்
விழுந்திடுமாம் நவ மணிகள்.
சிலகடைகள் பல பொருளை
விலை குறைத்து நலவு செய்யும்
பல கடைகள் கழிவுகளை
'கழிவு' எனக் கழுவி விடும்
கார்ட்டு டிஸ்கவ்ண்டில்
கேட்டுத் தின்பார்கள்
மாட்டி முழிப்பார்கள்
கட்டும் போதிலே
கழிவுக்காக பொருள் எடுப்போர்
நலிவடைவார்
-முகம்மட் நிழூஷ்-