திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸில் போலி பிஸ்டல் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி பயமுறுத்திய கடற்படை வீரரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (26) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹலாவத்த.சிலாபம்.கரவிடாகாரய பகுதியைச்சேர்ந்த கே.ஏ.என்.என்.கருணாரத்ன (36வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் விடுமுறை சென்ற கடற்படை சிப்பாய் மற்றைய நபருக்கு அவரது பயணப்பையில் இருந்த போலி பிஸ்டல் துப்பாக்கியை காட்டிய போது பயணி மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.